புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை!

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று இன்று (23.08) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

குறித்த ஒப்பந்தத்தமானது, மக் பணியாளர்கள் பணிவிலகலின் பின்னர் சரியான தொழில் வாய்ப்பு மற்றும் புதிய தொழில்களுக்கு தயார்படுத்தல், புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதை முக்கிய நோக்காக கொண்டுள்ளது. 

வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் யோ.நந்தகோபன், மக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லெனன், திறன் அபிவிருத்தி நிபுணர் த.செந்தூரன் மற்றும் தொழில் மற்றும் சமூகத் தொடர்புப் பிரிவு இணைப்பாளர், சி.சிவனேந்திரன், பல்கலைக்கழக அதிகாரிகள்,  விரிவுரையாளர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version