இலங்கை கிரிக்கெட்டுக்குள் தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் காலடி எடுத்து வைத்துள்ளார். கொழும்பு பெனடிக்ட் கல்லூரி அணிக்காக விளையாடி வரும் ஷாருஜன் மூன்றாமிடத்தில் ஓட்டங்களை குவித்து வரும் வீரர். இவ்வாறன நிலையில் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு முதற் தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் சிறந்த விக்கெட் காப்பாளருமாவார்.
மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு சாருஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 20 பேரடங்கிய இந்த தொடருக்கான குழுவில் இடம் பிடித்துள்ள ஷாருஜன் பதினொருவரில் இடம் பிடிப்பார் என்றே நம்பப்படுகிறது.
17 வயதான ஷாருஜன் தற்போது இலங்கை 19 வயது அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மேலும் 19 வயதுக்குட்பட்ட அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
பாடசலை மட்ட முதன்மை தொடரில் ஷாருஜன் 2021 ஆண்டுக்கான அகில இலங்கையின் சிறந்த விக்கெட் காப்பாளராக 15 வயதிலேயே தெரிவு செய்யப்பட்டிருட்ந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. அதற்கான விருது இந்த வருடமே வழங்கப்பட்டது. அதன் ஓய்ந்தனர் விருதுகள் பாடசாலை மட்ட போட்டிகளில் வழங்கப்படவில்லை.
இவருக்கு பிரபல கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளர் மறைந்த டொனி க்ரெய்க் “குட்டி சங்கா” என அவருக்கு 10 வயதாக இருக்கும் போது பெயர் சூட்டியிருந்தார். இப்போது சங்கக்காராவின் இடத்தையே ஷாருஜன் குறி வைத்து விளையாடி வருகிறார்.
பாடசலை மட்ட போட்டிகளில் மூன்றாமிடத்தில் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்து வரும் முன்னணி வீரராக ஷாருஜன் திகழ்ந்து வருகிறார். 19 வயதுகுட்டப்பட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தொடரில் அவர் திறமையை காட்டினால் மிக விரைவாகவே இலங்கை அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் நம்பலாம்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடவுள்ள அணிக்கு ரோயல் கல்லூரி வீரர் சினெத் ஜெயவர்தன தலைமை தாங்கவுள்ளார். தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களில் 09 பேர் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விபரம்
சினெத் ஜெயவர்த்தனே (தலைவர்) – (ரோயல் கல்லூரி, கொழும்பு)
மல்ஷா தருபதி (உப தலைவர்) – (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
விஷ்வ ராஜபக்ஷ – (சாந்த ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
தினுர களுபஹன – (மஹிந்த கல்லூரி, காலி)
விஹாஸ் தெவ்மிகா – (தேர்ஸ்டன் கல்லூரி)
கருகா சங்கேத் (லைசியம் சர்வதேச பாடசாலை, வத்தளை)
விஷ்வ லஹிரு – (ஸ்ரீ சுமங்கலா கல்லூரி, பாணந்துறை)
கவீஷா பியுமல் – (புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி)
பாதும் மலித – (தர்மசோகா கல்லூரி, அம்பலாங்கொடை)
புலிந்து பெரேரா – (தர்மராஜா கல்லூரி, கண்டி)
ரவிஷான் நெத்சர – (பி. டி. எஸ். குலரத்ன, அம்பலாங்கொட)
ருசண்டா கமகே – (புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு)
ருவிஷான் பெரேரா – (ஆனந்தா கல்லூரி, கொழும்பு)
சாருஜன் சண்முகநாதன் – (புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை)
விஷேன் ஹலம்பகே – (புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு)
ஹிரன் ஜெயசுந்தர – (புனித ஜோசப் கல்லூரி)
தினிரு அபேவிக்ரமசிங்க – (புனித சர்வேசியஸ் கல்லூரி, மாத்தறை)
ஜனித் பெர்னாண்டோ – (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
சுபுன் வடுகே – (திருத்துவ கல்லூரி, கண்டி)
தரண விமலதர்மா – (திருத்துவ கல்லூரி, கண்டி)