வாக்னர் கூலிப் படையின் தலைவரான எவ்கெனி பிரிகோஜின் உயிரிழந்து விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, வாக்னர் தலைவர் உட்பட பத்து பேர் தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோது, அது திடீரென விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த போது வாக்னர் தலைவருடன் அவரது தளபதி டிமிட்ரி உட்கின் இருந்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெவ்ஜெனி பிரிகோஷின் தலைமையிலான வாக்னர் குழு, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக கூலிப்படையாக செயல்பட்டது. இருப்பினும், பின்னர் அவர் ரஷ்யப் படைகள் தங்கள் நம்பிக்கையை மீறியதாகக் கூறினார், மேலும் கூலிப்படையினர் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளையும் ஆக்கிரமிக்க முட்பட்டனர்.
இந்த கிளர்ச்சி பெலாரஸ் ஜனாதிபதியின் தலையீட்டுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அந்த குழுவினர் பெலாரஸுக்கு இடம்பெயர்ந்தனர்.
சமீபத்தில் ஆப்ரிக்காவில் இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். அதில் கிளர்ச்சிக்கு பிறகு முதல் முறையாக யெவ்கெனி பிரிகோஜின் பொதுவெளியில் தோன்றியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.