மருத்துவ பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (24.08) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த ஏறக்குறைய ஏழாயிரம் அதிகாரிகள் கொண்ட குழுவைக் கொண்ட துணை மருத்துவ சேவைகளின் குழுவினர் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கதிரியக்க நிபுணர்கள், ஆய்வக விஞ்ஞானிகள், மருந்தாளுநர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் சிகிச்சை நிபுணர்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதில் தொடர் காலதாமதம், தர உயர்வு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடுவதில் தாமதம், புதிய ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம், தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோய் நிறுவனம், மகப்பேற்று வைத்தியசாலைகள், மத்திய இரத்த வங்கி மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version