இலங்கையின் அபிவிருத்திக்கான இந்தியாவின் உதவி தொடரும்

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான இந்தியாவின் உதவி தொடருமென இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜய்ஷ்ங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை-இந்தியா பாராளுமன்ற நட்பு சங்கத்தின் கூட்டத்தில் வீடியோ தொழில்நுப்பதினூடாக உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று(23.08) இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே “உணவு பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நாணய பரிமாற்று உதவி, நீண்டகால முதலீடு ஆகிய நான்கு விடயங்கள் மூலமாக இலங்கை-இந்தியா உறவு தொடரும்” என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் இலங்கை-இந்தியா உறவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியா-இலங்கை பாராளுமன்ற சங்கத்தின் மூலம் அவற்றை முன் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உரையாற்றிய அதேவேளை, இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சங்கத்தின் செயலர் பாரளுமன்ற உறுப்பினர் அனுரப்ரியதர்சன யாப்பா, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாரளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version