பிரிகோஜின் பாரிய தவறுகளை செய்தார் – புட்டின்!

வாக்னர்கூலிப்படையின் தலைவர் விமானவிபத்தில் கொல்லப்பட்டார் என வெளியான தகவல்களுக்கு மத்தியில் ரஸ்யா ஜனாதிபதி இந்த விபத்து குறித்து மௌனம் கலைத்துள்ளார்.

பிரிகோஜினின் மரணம் குறித்து மேற்குலக தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். குறிப்பாக அவருடைய இந்த மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் எழுந்தன.

இந்நிலையில் ரஷ்ய தொலைக்காட்சிக்கு உரையாற்றிய புட்டின் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், மொஸ்கோவிற்கு வடமேற்கே இடம்பெற்ற விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு புட்டின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். எனினும் வாக்னர் குழுவின் தலைவர் உயிரிழந்தார் என்பதை புட்டின் உறுதி செய்யவில்லை.

உக்ரைனில் உள்ள நவநாஜி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற பொதுவான இலக்கிற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள் அவர்கள் என புட்டின் தெரிவித்தார்.

பிரிகோஜின் குறித்து கருத்து வெளியிட்ட புட்டின் 90களின் ஆரம்பம் முதல் அவரை எனக்கு தெரியும் அவர் குழப்பகரமான வாழ்க்கையை கொண்டவர் எனத் தெரிவித்த புட்டின் உக்ரைன் போரில் அவர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

அத்துடன் அவர் வாழ்க்கையில் பாரிய தவறுகளை இழைத்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version