திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி திடீரென உயிரிழப்பு!

திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக்கொண்டிருந்த அழகிய யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்த சிறுமி, ஹொரண கோனாபொல விழா மண்டபம் ஒன்றிற்கு அவர் பணிபுரியும் நிறுவனம் ஒன்றின் திருமண நிகழ்வுக்காக சில நபர்களுடன் சென்றுள்ளார்.  

அங்கு குழுவினருடன் அவர்கள் உல்லாசமாக நடனமாடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த போது அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் சுகயீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து, அந்த வைத்தியசாலை வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறி சடலத்தை எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரேத பரிசோதனையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் யுவதியின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், ஹொரணை ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான் சுமேதா குணவர்தன, சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

ஹொரணை ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் பிரணித செனவிரத்ன பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version