மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பலி!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மாபகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (27.08) காலை இடம்பெற்றுள்ளது.

மொனராகலையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று  வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சாரதியும் மற்றுமொருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சாரதி மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மொனராகலை நக்கல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version