மெனிங்கோகோகல் தொற்று வீட்டுக்குள்ளேயே பரவுகிறது!

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்  நடத்திய சோதனைகளின்படி, இதுவரை இரண்டு ‘மெனிங்கோகோகல்’ தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக  சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, இதுவரை இரண்டு தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், அதில் ஒன்று காலியில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

இரண்டாவது நோயாளி ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர் குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

மேலும் மெனிங்கோகோகல் பாக்டீரியா தொற்று மற்றும் அது பரவும் முறைகள் குறித்து பேசிய MRI இன் நுண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் லிலானி கருணாநாயக்க, பாக்டீரியா பெரும்பாலும் உமிழ்நீர் மற்றும் சளி மூலம் பரவுகிறது என்று விளக்கினார்.

“பெரும்பாலும், இது ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பவர்களிடையே பரவுகிறது எனவும், இது ஒட்டுமொத்த சமூகத்திற்குள்ளும் பரவுவதை விட ஒரு வீட்டுக்குள்ளேயே பரவ வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version