ஒரு தமிழன் அவ்வளவு சீக்கிரம் டீம்ல சேர முடியாது…..! முரளீதரன் 800!

டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில், 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி கூடுதல் விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை கொண்டுள்ள, சுழல் பந்து ஜாம்பவான், முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை இந்திய கிரிகெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுகல்கர் இன்று (05.09) வெளியிட்டுள்ளார்.

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ‘மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்து. கடும் கண்டங்களுக்குப் பிறகு ‘நன்றி வணக்கம்’ என்று கூறி விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து மதுர் மிட்டலை கொண்டு, படத்தை எடுத்திருக்கிறார்கள். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் இலங்கை இந்தியா கூட்டு முயற்சியில் வெளியாகவுள்ளதுடன், பல இலங்கை கலைஞர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அத்துடன் இலங்கை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் இதில் பணியாற்றியுள்ளமை சுட்டிகாட்டத்தக்கது.

800 The Movie - Official Trailer (Tamil) | Madhurr Mittal | Ghibran | MS Sripathy
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version