ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளான சுப்பர் 04 தொடர் இன்று(06.09) ஆரம்பித்துளளது. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி லாகூரில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு அணிகளும் ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் மோதுகின்றன.
சுப்பர் 04 சுற்றில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. லீக் போட்டிகளில் முதலிரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.
அணி விபரம்
உபாதையடைந்துள்ள நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பங்களாதேஷ் அணி சார்பாக விளையாடவில்லை. லிட்டன் டாஸ் அவருக்கு பதிலாக விளையாடுகிறார். பாகிஸ்தான் அணி சார்பாக முகமட் நவாஸ் நீக்கப்பட்டு பஹீம் அஷ்ரப் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ்
1 மொஹமட் நைம், 2 மெஹிடி ஹசான் மிராஸ், 3 லிட்டன் டாஸ் , 4 ஷகிப் அல் ஹசான் (தலைவர்), 5 தௌஹித் ரிதோய், 6 முஷ்பிகுர் ரஹீம் (வி.கா), 7 ஷமீம் ஹொசைன் பட்வாரி, 8 அபிப் ஹொசைன், 9 தஸ்கின் அஹமட், 10 ஹசான் மஹ்முட், 11 ஷொரிபுல் இஸ்லாம்
பாகிஸ்தான்
1 பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 பஹீம் அஷ்ரப் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா
பாகிஸ்தான்
1 பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 பஹீம் அஷ்ரப் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா