நியூ சிலாந்து, இந்தியா அணிகள் இலகு வெற்றி

உலகக்கிண்ண 20-20 தொடரில் இன்று (5/11/2021) முதல் போட்டியாக நியூ சிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற நமீபியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.


முதலில் துடுப்பாடிய நியூ சிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. இதில் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 39(21) ஓட்டங்களையும், ஜிம்மி நீஷம் 35(23) ஓட்டங்களையும் பெற்றனர். ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டமாக 76 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். கேன் வில்லியம்சன் 28(25) ஓட்டங்களையும், டர்யில் மிட்செல் 19(15) ஓட்டங்களையும், மார்ட்டின் கப்டில் 18(18) ஓட்டங்களையும், டேவோன் கோன்வெய் 17(18) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கெர்ஹார்ட் எராஸ்மஸ், பெர்னார்ட் ஸ்சோல்ட்ஸ், டேவிட் விஸே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய நமீபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றது. இதில் மிச்செல் வன் லிங்கென் 25(25) ஓட்டங்களையும், சான் கிறீன் 23(27) ஓட்டங்களையும், ஸ்டெப்பன் பார்ட் 21(22) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ட்ரெண்ட் பொவ்ல்ட், டிம் சௌதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், மிச்சல் சன்டனர், ஜிம்மி நீஷம், ஐஸ் சோதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

நியூ சிலாந்து அணி 52 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் நாயகனாக ஜிம்மி நீஷம் தெரிவு செய்யப்பட்டார்

இரண்டாம் போட்டியாக இந்தியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோர்ஜ் மன்சி 24(19) ஓட்டங்களையும், மிச்செல் லீஸ்க் 21(12) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஷமி, ரவீந்திர ஜெடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 86 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய இந்தியா அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 89 ஓட்டங்களை பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் 50(19) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 30(16) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மார்க் வாட், பிராட் வீல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் நாயகனாக ரவீந்திர ஜெடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

நாளை (6/11/2021) பிற்பகல் 3:30 இற்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கியிலான போட்டி நடைபெறவுள்ளது. மாலை 7:30 இற்கு இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

வி.பிரவிக்
தரம் 03

நியூ சிலாந்து, இந்தியா அணிகள் இலகு வெற்றி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version