இலங்கை முழுவதும் புனரமைக்கபப்ட்ட மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட 100,000 KM தூரம் கொண்ட 1500 கார்ப்பட் வீதிகள் நேற்று மாலை வீரகெட்டிய, மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் வைத்து ஒரே நேரத்தில் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
மத்திய நெடுஞ்சாலை மற்றும் களனி பாலத்தின் இணைப்பு ஆகிய இந்த வருட இறுதிப் பகுதிக்குள் ஆரம்பிக்கப்ப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டபடி, புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாகத் தான் ஏற்படுத்துவதாக, குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும், அச்சவாலை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கொவிட் நோய்த்தொற்றின் முன்னே அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தி இருந்தால், இன்று இவ்வாறு 1,500 வீதிகளைத் திறந்துவைக்க முடியாமல் போயிருக்கும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்தார்.
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்திச் செய்யும் வேலைத்திட்டத்தின் போது, கிராமிய மற்றும் தோட்ட வீதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டை கட்டியெழுப்புவதற்கு கிராமிய வீதிக் கட்டமைப்பை அபிவிருத்திச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த அதேவேளை
வீதி அபிவிருத்திக்கு இணையாக கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, பிரதமர் மேலும் தெரிவித்தார்.
