உலகப் புகழ் பெற்ற வீரர் ஜோன் சீனாவை சந்தித்த கார்த்தி!

உலகப் புகழ் பெற்ற WWE விளையாட்டு வீரர் ஜோன் சீனாவை நடிகர் கார்த்தி சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

WWE என சொல்லப்படுகின்ற மல்யுத்த விளையாட்டு போட்டிக்கு உலகளவில் இரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக அதில் பங்குபற்றும் வீரர்களுக்கு ஏகோபித்த வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

இதில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு வீரர் தான் ஜோன் சீனா. இவருக்கென்று தனி இரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். மேலும் 16 முறை சாம்பியன் பட்டம் பெற்ற இவர் ஹோலிவுட் நடிகருமாவார்.

இந்நிலையில், இந்த விளையாட்டு போட்டி ஹைதராபாத்தில் உள்ள காஜிபவுலி உள்விளையாட்டு அரங்கில் ”சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்” என்ற பெயரில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஜோன் சீனாவும் வருகை தந்துள்ளார்.

இதன்போது அவரை சந்தித்த கார்த்தி இது சம்பந்தமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “ஜோன் சீனா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி. சந்தித்த சில நிமிடங்களில் நீங்கள் அனைவரையும் சிறப்பாக உணரவைத்தது அற்புதம்” எனக் கூறியுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற வீரர் ஜோன்  சீனாவை சந்தித்த கார்த்தி!
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version