தோட்ட மக்களை சீண்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!

இரத்தினபுரி – கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தில் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு உடைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினருமான சுப்பையா ஆனந்தகுமார் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தனவின் ஊடாக இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளர்.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.

தோட்ட முகாமைத்துவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள ஆனந்தகுமார், தோட்ட மக்களை தோட்ட நிர்வாகங்கள் தொடர்ச்சியாக சீண்டுவதையும் தாக்குதல்களை மேற்கொள்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தோட்ட நிர்வாகம் புதிய வீட்டை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version