சூடான் தலைநகர் கார்ட்டூமில் மக்கள் அதிகம் கூடும் சந்தையில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த தாக்குதலில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துணை இராணுவப் படைக்கு எதிராக சூடான் படைகளால் இலக்கு வைக்கப்பட்ட குறித்த தாக்குதல் தெற்கு கார்ட்டூமில் உள்ள குரோ சந்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கார்ட்டூமில் உள்ள இரண்டு நகரங்களின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.