டெங்கு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 30,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 20 வீதமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டபட்டுள்ளது.

எனவே, சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை உணர்ந்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version