இந்தியா, பாகிஸ்தான் போட்டி மீள ஆரம்பம்

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 போட்டி மேலதிக நாளில் ஆர்மபித்துள்ளது. ஓவர்கள் குறைப்பின்றியே போட்டி ஆரம்பமாக்கியுள்ளது. பிற்பகல் 4.40 இற்கு

போட்டியின் நடுவே மீண்டும் மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளது. வானம் தெளிவான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராப் சுப்பர் 04 தொடரில் பந்துவீச மாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 5.10 மணிக்கு மழை ஆரம்பித்தது. மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆரம்பிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்தமையினால் போட்டி நிறுத்தப்பட்டு இரண்டாம் நாளான இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. பிரேமதாச மைதானத்தில் இது வழமைக்கு மாறான முடிவு. இந்திய அணி முதலில் துடுப்பாட விரும்பியதாக ரோஹதித் ஷர்மா தெரிவித்திருந்தார்.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆரம்பம் ஒன்றை வழங்கினர். ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஆகிய இருவரும் 121 ஓட்டங்களை பகிர்ந்து அரைச்சதங்களையும் பூர்த்தி செய்தனர். ஷதாப் கான் மோசமாக அடிவாங்கிய போதும் முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். ரோஹித் ஆட்டமிழந்து 7 பந்துகளில் கில் ஆட்டமிழந்தார். அதன் பின் விராத் கோலி, லோகேஷ் ராகுல் நிதானமான இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி இன்னிங்ஸை கட்டியெழுப்பினர். 24.1 ஓவர்களில் 02 விக்கெட்டினை இழந்து 147 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று போட்டி ஆர்மபித்துள்ளது.

சுப்பர் 04 சுற்றில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் அவர்களின் அடுத்த சுற்று வாய்ப்பு அதிகரிக்கும். இந்தியா அணி முதற் போட்டியில் விளையாடும் நிலையில் அவர்களுக்கு வெற்றி ஒன்று அவசியமாக தேவைப்படுகிறது. இந்த இரு அணிகளது போட்டி முடிவுகளும் இலங்கை அணியின் வாய்ப்பிலும் தாக்கம் செலுத்தும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோகித் சர்மாபிடி – பஹீம் அஷ்ரப் ஷதாப் கான்564964
சுப்மன் கில்பிடி – அகா சல்மான்ஷகீன் ஷா அப்ரிடி5852100
விராட் கோலி  081600
லோகேஷ் ராகுல்  172820
இஷன் கிஷன்      
ஹார்டிக் பாண்ட்யா      
ரவீந்தர் ஜடேஜா      
ஷர்ட்டூல் தாகூர்      
குல்தீப் யாதவ்      
ஜஸ்பிரிட் பும்ரா      
மொஹமட் ஷிராஜ்      
உதிரிகள்  20   
ஓவர்  24.1விக்கெட்  02மொத்தம்147   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷகீன் ஷா அப்ரிடி05003701
நசீம் ஷா05012300
பஹீம் அஷ்ரப் 03001500
ஹரிஸ் ரவுஃப்05002700
ஷதாப் கான்6.1014501
     
       

அணி விபரம்

ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்ட்டூல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்

பாபர் அசாம் (தலைவர்), முகமட் ரிஸ்வான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், இப்திகார் அகமட், அகா சல்மான், ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா, பஹீம் அஷ்ரப்

பஹீம்

மைதான விரிப்புகள் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீண்டும் மழை அதிகரித்ததுள்ளது. விரிப்புகளுக்கே கீழேயும் ஈரம் காணப்படுகின்றது. நாளைய தினம் போட்டி இன்று விட்ட இத்திலிருந்து தொடரும் என்ற ஏற்பாடே காணப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version