தலைவர் 171 : அறிவிப்பு வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (11.09) வெளியிட்டுள்ளது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதுடன், அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கவுள்ளார். அத்துடன் சண்டை கலைஞராக அன்பறிவ் பணியாற்றவுள்ளார்.

இதேவேளை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை உருவாகியுள்ள அனைத்து திரைப்படங்களுமே வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், இரு முன்னணி நட்சத்திரங்களின் இணைவு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் 171  : அறிவிப்பு வெளியானது!

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version