இலங்கை 19 வயது அணி முன்னிலையில்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் போட்டி தம்புள்ளை, ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்று(12.09) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் 19 வயது அணியை, இலங்கை 19 வயது அணியின் சிறந்த பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தியது. ஆரம்ப இணைப்பாட்டமாக 57 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதும், மிகுதி விக்கெட்கள் 70 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. ஜோர்டான் ஜோன்சன் 52 ஓட்டங்களையும், ஸ்டீபன் பஸ்கால் 28 ஓட்டங்களையும், ஸ்டீவ் வெடேர்பன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்களான விகாஸ் தேவ்மிகா 5 விக்கெட்களையும், மல்ஷா தருப்பதி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை 19 வயது அணி முதல் நாள் நிறைவில் 04 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் ருஷாந்த கமகே 58 ஓட்டங்களையும், ரவிஷான் டி சில்வா 43 ஓட்டங்களையும், புலிந்து பெரேரா 41 ஓட்டங்களையும் பெற்றனர். தினுற கழுபஹன 23 ஓட்டங்களையும், ஷாருஜன் சண்முகநாதன் 21 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காமல் துடுப்பாடி வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version