உலகக்கிண்ண அரை இறுதியில் மேலும் இரு அணிகள்.

உலகக்கிண்ண 20-20 தொடரில் நேற்று (7/11/2021) முதல் போட்டியாக நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றது. இதில் நஜிபுல்லா சத்ரன் 73(48) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ட்ரெண்ட் பொவ்ல்ட் 3 விக்கெட்களையும், டிம் சௌதி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 125 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 40(42) ஓட்டங்களையும், டெவோன் கொன்வேய் ஆட்டமிழக்காமல் 36(32) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஜீப் ஆர் ரஹமான், ரஷீட் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

நியூ சிலாந்து அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாக ட்ரெண்ட் பொவ்ல்ட் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாம் போட்டியாக பாக்கிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது இதில் பாபர் அசாம் 66(47) ஓட்டங்களையும், ஷொயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 54(18) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் கிரிவ்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள். 190 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது. இதில் ரிச்சி பேரிங்டொன் ஆட்டமிழக்காமல் 54(37) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஷதாப் கான் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பாக்கிஸ்தான் அணி 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாக ஷொயிப் மாலிக் தெரிவு செய்யப்பட்டார்.

இன்று மாலை 7:30 இற்கு நமீபியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

உலகக்கிண்ண அரை இறுதியில் மேலும் இரு அணிகள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version