சீரற்ற வானிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மழையுடன் சில பிரதேசங்களில் நுளம்பு அடர்த்தி அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
“நாடு முழுவதும் கிட்டத்தட்ட 63,000 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், இம்மாதம் 12 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 1000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தின் சில பகுதிகளிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.