ரயில் விபத்து : இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு!

ஹொரபே ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இன்று வரை 13 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

புகையிரத சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் 119 ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி நேற்று இரவு வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version