நளினி உள்ளிட்ட நால்வரையும் இலங்கை அனுப்பும் மத்திய அரசு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கை அனுப்பவுள்ளதாக மத்திய அரசு அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து   தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்த விசாரணையின்போதே மத்திய அரசு மேற்படி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேரின் கடவுச்சீட்டு ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version