ஆசிய கிண்ண தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
மழை காரணமாக 5.10 இற்கே போட்டி ஆர்மபித்தது. அதன் காரணமாக 45 ஓவர்கள் போட்டியா ஆரம்பித்த போட்டி மீண்டும் மழை பெய்து 8.10 இற்கு ஆரம்பிக்கும் போது 42 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது. இதன்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ஓட்டங்களை பெற வேண்டுமென்ற இலக்கு டக் வேர்த் லூயிஸ் முறைப்படி நிரணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப விக்கெட் இன்றைய போட்டிக்காக அணியில் இணைக்கப்பட்ட ப்ரமோட் மதுஷானினால் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஷாட் ஷபீக், பாபர் அஸாம் ஜோடி 64 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற போது டுனித் வெல்லாளகேயினால் பாபர் அஷாமின் விக்கெட் கைப்பற்றப்பட்டது.நிலைத்து நின்று துடுப்பாடி அரைச் சததமடித்த அப்துல்லா ஷபிக் மதீஷ பத்திரனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு விக்கெட்களையும் மதீஷ பத்திரன கைப்பற்றினார். ஐந்தாவது விக்கெட் 130 ஓட்டங்களை பெற்ற நிலையில் வீழ்த்தப்பட்டது.
விக்கெட்கள் வீழ்ந்தாலும் நான்காமிலக்கத்தில் களமிறங்கிய மொஹமட் ரிஷ்வான் வேகமாக ஓட்டங்களை குவிக்க பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை உயர்ந்து சென்றது. 42 ஓவர்களாக ஓவர்கள் குறைக்கப்பட்டதும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வேகம் அதிகரித்தது. மொஹமட் ரிஷ்வான்-இப்திகார் அஹமட் ஜோடி அரைச்சத இணைப்பாட்டத்தை வேகமாக பூர்த்தி செய்தனர். மொஹமட் ரிஷ்வானும் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணி பலமான நிலைக்கு சென்றது. மொஹமட் ரிஷ்வான்-இப்திகார் அஹமட் ஜோடி 108 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். சத இணைப்பாட்டத்தை 75 பந்துகளில் பூர்த்தி செய்திருந்தனர். மதீஷ பத்திரன அந்த இணைப்பாட்டத்தை முறியடித்தார்.
இந்த இலக்கு இலங்கை அணிக்கு இலகுவானதல்ல. வெற்றி பெற கடுமையாக போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காட்டிய இறுக்கத்தை தொடர முடியாமல் போனதும், மொஹமட் ரிஷ்வானின் துடுப்பாட்டமும் இந்த நிலையை உருவாக்கியது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி, இந்தியா அணியுடன் 17 ஆம் திகதி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
அப்துல்லா ஷபிக் | பிடி – ப்ரமோட் மதுஷான் | மதீஷ பத்திரன | 52 | 69 | 3 | 2 |
ஃபகார் ஷமான் | Bowled | ப்ரமோட் மதுஷான் | 04 | 11 | 0 | 0 |
பாபர் அசாம் | St. குஷல் மென்டிஸ் | டுனித் வெல்லாளகே | 29 | 35 | 3 | 0 |
முகமட் ரிஸ்வான் | 86 | 73 | 6 | 2 | ||
மொஹமட் ஹரிஸ் | பிடி -மதீஷ பத்திரன | மதீஷ பத்திரன | 03 | 09 | 0 | 0 |
முஹமட் நவாஸ் | Bowled | மஹீஸ் தீக்ஷண | 12 | 12 | 2 | 0 |
இப்திகார் அகமட் | பிடி – தஸூன் சாணக்க | மதீஷ பத்திரன | 47 | 40 | 4 | 2 |
ஷதாப் கான் | பிடி -குஷல் மென்டிஸ் | ப்ரமோட் மதுஷான் | 03 | 03 | 0 | 0 |
ஷகீன் ஷா அப்ரிடி | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 15 | |||||
ஓவர் 42 | விக்கெட் 07 | மொத்தம் | 252 | |||
வெற்றியிலக்கு | 252 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ப்ரமோட் மதுஷான் | 07 | 01 | 58 | 01 |
மஹீஸ் தீக்ஷண | 09 | 00 | 42 | 01 |
தஸூன் சாணக்க | 03 | 00 | 18 | 00 |
டுனித் வெல்லாளகே | 09 | 00 | 40 | 01 |
மதீஷ பத்திரன | 08 | 00 | 65 | 03 |
தனஞ்சய டி சில்வா | 06 | 00 | 28 | 00 |
அணி விபரம்
இலங்கை
குஷல் பெரேரா, டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, மதீஷ பத்திரனே, ப்ரமோட் மதுஷான் சரித் அசலங்க
பாகிஸ்தான்
பாபர் அசாம் (தலைவர்), பக்கார் ஷமான், அப்துல்லா ஷபிக், மொஹமட் ஹரிஸ், முகமட் ரிஸ்வான், இப்திகார் அகமட், ஷதாப் கான், முஹமட் நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, மொஹமட் வசீம் ஜூனியர், ஷமான் கான்