முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள தேயிலை கைத்தொழில்!

நாட்டின் தேயிலை கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதிக்கு தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் இலங்கையில் தேயிலை கைத்தொழில் இன்னும் சிறிது காலத்தில் இல்லாது போகலாம் என்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா நேற்று (14.09) தெரிவித்துள்ளார்.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்,சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 2500 ரூபாவிற்கு உரத்தை பெற்று வந்ததாகவும் தற்போது உரம் 11,500 முதல் 12,000 வரை சென்றுள்ளதாகவும்,8000 ரூபாவிற்கு உரம் இருப்பதாக அரசாங்கம் அறிவித்த போதும் உரத்தின் விலை 11,500 முதல் 12,000 வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேயிலை சக்தி நிதியத்தைக் கலைத்துவிட்டு, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் முதலில் முதலீடு செய்த 10 ரூபா பங்குத் தொகையை மட்டும் வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும்,சிறு தேயிலை உரிமையாளர்களின் நிதியை கொள்ளையடிக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறுவதாகவும் அதனை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவி ரங்க பண்டாரவிடமிருந்து பறிபோகலாம் என்றும் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version