ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது

இலங்கையின் மோசமான தோல்வி. இந்தியாவின் அதிரடி வெற்றி.பொறுப்பற்ற இலங்கை துடுப்பாட்டம்.SriLankaVsIndia

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அணி 10 விக்கெட்களினால் இலகுவாக வெற்றி பெற்று எட்டாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

அரங்கு நிறைந்த பார்வையாளர்களோடு அதிகமாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் ரசிகர்களோடு நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியின் மிக மோசமான போட்டியாக இது அமைந்து. ரசிகர்களுக்கு முழு ஏமாற்றம் தரும் போட்டியாக இது அமைந்தது.

இந்தப் போட்டியானது மொத்தமாக 116 நிமிடங்கள் மட்டுமே விளையாடப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்பு பற்றி கதைக்கவே தேவையில்லை என்ற நிலையை இலங்கை அணி உருவாக்கியது. 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களை மட்டுமே பெற்றது இலங்கை அணி. இலங்கை அணியின் இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். தென்னாபிரிக்க அணிக்கெதிராக 43 ஓட்டங்களை பெற்றமையே குறைந்த ஓட்டங்களாகும்.

51 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடிய இந்தியா அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி அதிக பந்துகள் மீதமிருக்க பெற்றுக்கொண்ட வெற்றியாக இந்த வெற்றி அமைந்துள்ளது. 231 பந்துகள் மீதமிருக்க கென்யா அணிக்கெதிராக பெற்ற வெற்றியே அதிக பந்துகள் மீதமிருக்க பெற்ற வெற்றியாகும்.

போட்டி ஆரம்பிக்க 10 நிமிடங்களுக்கு முன்னர் பெய்த மழையினால் போட்டி 40 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்தது. இருப்பினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

இலங்கை அணி முதல் ஓவரிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷல் பெரேராவின் விக்கெட்டை இழந்தது. ஆரம்ப பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகியோர் அச்சுறுத்தும் வகையில் பந்துவீசினார்கள். நான்காவது ஓவரில் பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்க இலங்கை அணியின் தடுமாற்றம் ஆரம்பித்தது. அதே ஓவரிலேயே சதீர சமரவிக்ரமவும் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் கதை முடிந்தது என்ற நிலை உருவானது. அடுத்த பந்திலேயே சரித் அசலங்க ஆட்டமிழந்தார். 2 பந்துகளில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்தார். ஒரு ஓவரில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்களை கைப்பற்றினார். லசித் மாலிங்காவுக்கு பிறகு ஒரு ஓவரில் நான்கு விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மொஹமட் சிராஜ் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தியா அணி சார்பாக ஒரு ஓவரில் நான்கு விக்கெட்களை கைப்பற்றிய ,முதலாவது பந்து வீச்சாளர் ஆவார்.

மொஹமட் சிராஜின் அடுத்த ஓவரில் ஐந்தாவது விக்கெட்டை அவர் கைப்பற்ற இலங்கை அணி ஆறாவது விக்கெட்டினை இழந்தது, தஸூன் சாணக்க ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். மொஹமட் சிராஜின் முதலாவது ஐந்து விக்கெட் பெறுதியாக இது அமைந்தது. அத்தோடு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 50 விக்கெட்கள் என்ற மைற்கல்லையும் தாண்டினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த குஷல் மென்டிஸ் மற்றும் டுனித் வெல்லாளகே ஆகியோர் இலங்கை அணியை மீட்கும் பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தியா அணியின் பந்துவீச்சாளர்களோ இரக்கமின்றி செயற்படுவது போன்று கடுமையாக தொடர்ந்தும் இறுக்கமாக பந்துவீசினார்கள். 12 ஆவது ஓவரில் குஷல் மென்டிஸ் மொஹமட் சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 33 ஆக காணப்பட்டது.
இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும் 20வயதான இளம் டுனித் வெல்லாளகே நிதானம் கார்த்து நின்று துடுப்பாடிய விதம் பாராட்டுக்குரியது. ஆனலும் ஹார்டிக் பாண்ட்யாவின் பௌன்சர் பந்துக்கு தடுமாறி ஆட்டமிழந்தார். 21 பந்துகளை அவர் எதிர்கொண்டார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு துடுப்பாட தெரியாதா என்ற கேள்வியே எழும்பியது. விக்கெட்கள் அடுத்ததடுத்து வீழ்த்தப்பட லீவ் செய்து துடுப்பாடமால் சகல பந்துகளுக்கும் துடுப்பாட்ட பிரயோகம் மேற்கொண்டது ஆட்டமிழப்புகளுக்கு காரணமாக அமைந்தது. 4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்கள் என்ற நிலையில் அணியை மீட்டு எடுப்பது இலகுவானதல்ல. அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை அணியின் கதை முடிந்து போனது. இறுதிப் போட்டி ஒன்றில் இந்தளவு மோசமான துடுப்பாட்டமா என்ற நிலை உருவாகிப்போனது.

இரு அணிகளும் எட்டாவது தடவையாக மோதிய நிலையில் இந்தியா அணி எட்டாவது தடவையாக கிண்ணத்தை வென்றுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
இஷன் கிஷன் 231830
சுப்மன் கில்  271960
விராட் கோலி      
ரோகித் சர்மா      
லோகேஷ் ராகுல்      
ஹார்டிக் பாண்ட்யா      
ரவீந்தர் ஜடேஜா      
அக்ஷர் பட்டேல்      
ஜஸ்பிரிட் பும்ரா      
குல்தீப் யாதவ்      
மொஹமட் ஷிராஜ்      
உதிரிகள்  01   
ஓவர்  6.1விக்கெட்  00மொத்தம்51   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ப்ரமோட் மதுஷான்02002100
மதீஷ பத்திரன02002100
டுனித் வெல்லாளகே02000600
சரித் அசலங்க   0.1000100
     
     
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- ரவீந்தர் ஜடேஜாமொஹமட் ஷிராஜ்020400
குஷல் பெரேராபிடி- லோகேஷ் ராகுல்ஜஸ்பிரிட் பும்ரா000200
குசல் மென்டிஸ்Bowledமொஹமட் ஷிராஜ்173430
சதீர சமரவிக்ரமL.B.Wமொஹமட் ஷிராஜ்000200
சரித் அசலங்கபிடி- இஷன் கிஷன்மொஹமட் ஷிராஜ்000100
தனஞ்சய டி சில்வாபிடி- லோகேஷ் ராகுல்மொஹமட் ஷிராஜ்040210
தஸூன்  ஷானகBowledமொஹமட் ஷிராஜ்000400
டுனித் வெல்லாளகேபிடி- லோகேஷ் ராகுல்ஹார்டிக் பாண்ட்யா082100
டுஸான் ஹேமந்த  131510
ப்ரமோட் மதுஷான்பிடி- விராத் கோலிஹார்டிக் பாண்ட்யா010600
மதீஷ பத்திரனபிடி- இஷன் கிஷன்ஹார்டிக் பாண்ட்யா000100
உதிரிகள்  03   
ஓவர்  15.2விக்கெட்  10மொத்தம்50   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஜஸ்பிரிட் பும்ரா05012301
மொஹமட் ஷிராஜ்07012106
ஹார்டிக் பாண்ட்யா2.2000303
குல்தீப் யாதவ்01000100

அணி விபரம்

இலங்கை அணி சார்பாக உபாதையடைந்த மஹீஸ் தீக்ஷணவுக்கு பதிலாக டுஷான் ஹேமந்த இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியோடு ஓய்வு வழங்கப்பட்ட இந்தியா வீரர்கள் அனைவரும் இன்றைய போட்டிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இருப்பினும் அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டு வொஷிங்டன் சுந்தர் இந்தப் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தியா
ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, வொஷிங்கடன் சுந்தர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்

இலங்கை
குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க(தலைவர்), டுனித் வெல்லாளகே, டுஸான் ஹேமந்த, மதீஷ பத்திரனே, ப்ரமோட் மதுஷான், சரித் அசலங்க

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version