ஆனமடுவையில் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்!

ஆனமடுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் குடிபோதையில் செலுத்திய சொகுசு காரை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது மோதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் நீதிமன்றத்தில் முன்னைலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ, பெத்துக்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த வர்த்தகர், அவரது நண்பர்கள் சிலருடன், வாட்டியபஹலகம ஏரி பகுதியில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனத்தை ஒட்டியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 14 வயதுடைய மகள் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய கோடீஸ்வர வர்த்தகர் விபத்தை ஏற்படுத்திவிட்டு, அது தொடர்பில் அக்கறையின்றி, வீடு சென்று, உறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக ஆனமடுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவரது வீட்டுக்குச் சென்ற போது, ​​பொலிஸாரின் கடமையும் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியமை, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்த வர்த்தகர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version