கொழும்பில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை

கொழும்பில் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் இந்த நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தை தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல அமைப்புகள் கொழும்பு கோட்டை, கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி போன்ற இடங்களில் திலீபனின் நினைவேந்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளமையினால் இந்த நிகழ்வை நடத்த தடையுத்தரவு வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவை எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த தடையுத்தரவை வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version