நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரம் உடைக்கப்பட்டு அதில் இருந்த 76 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
18ம் திகதி வங்கி பணிகள் துவங்கியதையடுத்து, டேலர் இயந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிட்டம்புவ பொலிஸார், வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.