அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்!

லங்கா சதொச நிறுவனம் இன்று (20.09) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இதன்படி ஒருகிலோ இறைச்சியின் விலையை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 580 ரூபாவாகும்.

ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை  40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெண்டைக்காய் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 620 ரூபாவாகும். ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபாவாகும். சிவப்பு பருப்பு 6 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version