பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை, அகலவத்தை, மத்துகம, வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

தொடரும் மழையுடனான வானிலையை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பில் மாற்றங்கள் ஏற்ப்பட கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version