தொழில்முனைவை மேம்படுத்துவது ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டின் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு தேவையான கல்விப் பின்னணி மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் அதன் தேவை மேம்படுத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கீழ் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது குறித்தும் அவதானம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட, அசங்க நவரத்ன மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் தொடர்புடைய துறையின் விரிவுரையாளர்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.