வாகன உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், எனினும் உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று (09/11) பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் செஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வாகன உதிரிபாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீண்ட நாட்களுக்கு நடைமுறையில் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
