13 விக்கெட்கள் ஒரு நாளில் – சூடு பிடிக்கும் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் லண்டன் த ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இந்தப் போட்டியின் முதல் நாளில் 13விக்கெட்கள் வீழத்தப்பட்டுள்ளன. இந்தியா அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் சர்தூள் தாகூர் அதிரடியாக துடுப்பாடி 57(36) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். விராத் கோலி 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் உபாதையில் இருந்து மீண்டு வந்த க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களையும், ஒலி ரொபின்சன் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன்,க்ரேக் ஓவெர்ட்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி தன்னுடைய ஆரம்ப விக்கெட்கள் இரண்டையும் வேகமாக இழந்தது. இந்த தொடரில் இந்தியா அணிக்கு பெரும் தலையிடியாக இருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டையும் இந்தியா அணி கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இதில் டாவிட் மலான் ஆட்டமிழக்கமால் 26 ஓட்டங்களையும், ஜோ ரூட் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்களையும், இந்தப் போட்டியில் அணியில் இணைக்கப்பட்ட உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளார்கள்.
இரண்டாம் நாளான இன்றைய தினம் இந்தப் போட்டி விறு விறு விறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version