கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் திட்டத்தில் 18 வயது தொடக்கம் 30 வயத்துக்குட்பட்டோருக்கு தடுப்பூசிகள் ஏற்ற ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல குறித்த வயது பிரிவினருக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகளை ஆரம்பிக்குமாறு சுகாதார தரப்பினருக்கு அறிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த வயது பிரிவினருக்கு ஊசிகள் ஏற்றும் பணிகள் அராம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கே எப்போது இந்த வயது பிரிவினருக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெறுகின்றன என்பது தொடரில் சரியான அறிவித்தல்கள் எதுவும் வெளியாகவில்லை. பல மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தடுப்பூசியே இன்னமும் முழுமையாக வழங்கி முடிவடையாத நிலையிலும், குறிப்பிட்ட இந்த இரண்டு வயது பிரிவினரில் அநேகமானவர்களுக்கு இரண்டாம் ஊசிகளும் வழங்கப்படாத நிலையில் மூன்றாவது பிரிவினருக்கு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டமாக பூர்த்தி செய்வதனால் உரிய நேரத்தில் இரண்டாவது ஊசிகளை மக்கள் பெறமுடியும். அத்தோடு இரண்டாம் ஊசிக்கு வழங்கப்பட்ட திகதிகளில் பல இடங்களில் இரண்டாம் ஊசிகள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.