அணு ஆயுத தவிர்ப்பு&மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்

முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.

முழுமையான அணு சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவு 14 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கடந்த ஜூலையில் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) இலங்கை உத்தியோகபூர்வமாக ஒப்பந்தத்தை அங்கீகரித்தாகவும், இலங்கையின் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அணுவாயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவற்றின் நீண்டகால மற்றும் நிலையான கொள்கையுடன் ஒத்துப்போகிறது என்றும் தெரிவித்தார்.

1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தில் (CTBT) கைசாத்திட்ட 13ஆவது நாடாக இலங்கை விளங்குகிறது. அதன்படி, கண்டி பல்லேகலவில் துணை நில அதிர்வு நிலையமும் நிறுவப்பட்டது.

இணக்கப்பாட்டை செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) நிர்வாகப் பணிப்பாளர் பிலாய்ட் மற்றும் முழுமையான குழுவின் இடைவிடாத முயற்சிகளையும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராட்டினார்.

மேலும், 1996 இல் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து, தள ஆய்வுகள் (OSI) பிரிவுடன் நெருக்கமான ஒத்துழைப்பு உட்பட, முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) பணிகளுக்கு இலங்கை செயற்திறன்மிக்க வகையில் ஆதரவளித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 180 பேரின் பங்கேற்புடன் 2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த தள ஆய்வுகள் (OSI) கூட்டு களப் பயிற்சியை (OSI) இலங்கை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) தள ஆய்வு திறன்களை மேம்படுத்துவதற்கும் மேலும் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் இந்த பயிற்சி ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்.

இலங்கை இந்த உடன்படிக்கையை ஏற்று 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. மற்றும் உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடுகளை அடைவதற்கான நிர்வாக பொறிமுறைகளில் ஒரு அடிப்படை மைல்கல்லாக அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) அணுசக்தி சோதனைக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க கூட்டு நம்பிக்கையை வளர்ப்பதற்காக செயற்படுவதுடன் மேலும் பனிப்போரின் ஆபத்தான அணு ஆயுதப் போட்டியை திறம்பட கட்டுப்படுத்தியது என்றார்.

மேலும், ஒப்பந்தத்தின் சரிபார்ப்பு பொறிமுறையானது அணு ஆயுதக் குறைப்புக்கு அப்பால் சிவில் மற்றும் அறிவியல் நோக்கங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு வலுவான சர்வதேச கண்காணிப்புக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரவு மையமொன்றையும் நிறுவியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அண்மைக்கால சவால்களுக்கு மத்தியில், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) மீளாய்வு மாநாட்டில், உலகளாவிய பாதுகாப்பைப் பேணுவதில் விரிவான முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) முக்கிய பங்கை இலங்கை வலியுறுத்தியதோடு, இலங்கை அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை அவசியப்படுத்தும் நாடுகள், அங்கீகரிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அணுவாயுத மயமாக்கல் மற்றும் நிராயுதபாணியாக்கத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது, மேலும் இந்த முக்கியமான இலக்குகளை அடைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NTPNW) இலங்கை இணைவதற்கான சட்டரீதியான ஆவணம் கடந்த நாட்களில் கையளிக்கப்பட்டதை அமைச்சர் அலி சப்ரி நினைவு கூர்ந்த அமைச்சர், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரிப்பதன் ஊடாக, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் நிராயுதமாக்கல் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இலங்கையின் நிலைபேறான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version