சபுகஸ்கந்த கொலைச் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது

சபுகஸ்கந்த – மாபிம வீதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் இன்று (09/11) கைது செய்துள்ளனர்.

அத்துடன் கொலை செய்யப்பட்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள், அவரது பணம், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் சடலத்தை எடுத்துச் செல்ல உபயோகித்த முச்சக்கரவண்டி ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகள் கொழும்பிலுள்ள நகை கடையொன்றில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சபுகஸ்கந்த கொலைச் சம்பவம் - பிரதான சந்தேகநபர் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version