கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய (23.09) தினம் பிற்பகல் 6.00 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுற்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி,  கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அம்பத்தலே நீர் வழங்கல் முறைமை மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply