பால்மா விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பால்மாவிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பால்மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பால் மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என ஒன்றியத்தின் உறுப்பினர்  லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ஒரு கிலோ பால்மா பக்கெட்டிற்கு தற்போது விதிக்கப்படும் 650 ரூபாய் வரியை நீக்கினால், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பாக்கெட்டை 600 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடந்த இரண்டு வார காலப்பகுதியில் பால்மாவிற்கான வரி 05 வீதத்தில் இருந்து 10 வீதமாக அதிகரித்துள்ளது எனக் கூறிய அவர், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் பால்மா விற்பனை 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version