இலங்கையில் நடைமுறையிலுள்ள இறக்குமதி தடையை ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நிதியமைச்சு நடவடிக்கைள் எடுத்துள்ளதாக நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காகவே இந்த தடை நீக்கப்படுகிறது. இந்த நிலையில் எவரும் வந்து வாகன இறக்குமதிக்கு அனுமதி கோர மாட்டார்கள். வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தை அதிகரித்த பின்னரும், கடன் மீள் செலுத்துகை நிறைவு செய்ததும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும். அதற்கு முன்னர் அனுமதி வழங்கினால் மேலும் ஒரு பொருளாதார அனர்த்தம் ஏறடுமென அவர் தெரிவித்துளளார்.