யாழில் நீண்ட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் கடந்த 33 வருடங்களாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தது.
குறித்த ஆலயத்தை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக தற்போது ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (22.09) மாலை இராணுவத்தினரின் அனுமதியுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை மக்கள் சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் குருமார்களினால் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.