பாடசாலை பாடப்புத்தகம் அச்சிடும் பணி நிறைவு!

2024 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பாடசாலை பாடப்புத்தக அச்சிடும் பணியை, குறைந்த செலவில், உரிய நேரத்தில் செய்து முடிக்க முடிந்தது மகிழ்ச்சிகரமான ஒரு விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைகள் தொடர்பில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த பலதரப்பினரின் கருத்துகளையும் அவர் நிராகரித்தார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version