எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக கருவூலத்திற்கு 890,000 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 16 மில்லியன் ரூபாவும் திறைசேரிக்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த தொகை மீனவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீவிபத்தினால் கடற்பகுதிக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்வதற்காகவும், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, எதிர்வரும் சில வருடங்களில் இந்நாட்டில் வெளிநாட்டுக் கடன் வீதத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.