சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் மிதக்கும் தடுப்புச் சுவரை சீனா கட்டுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தென் சீனக் கடல் பகுதிக்குள் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் பிரவேசித்து மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் இந்த மிதக்கும் தடுப்புச்சுவர் சீன கடலோர காவல்படையினரால் கட்டப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
300 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் தடையை கடல் ரோந்து கப்பல் மூலம் கண்டுபிடித்ததாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.