ஏதேனும் குற்றச்செயல்கள் நடந்தால் காவல் நிலையத்தில் முறையிடுங்கள்!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அந்த தரப்பினரைக் கட்டுப்படுத்தி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவிதுள்ளார். 

பொரளை கார்கில்  FOOD CITY விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார்.

பொருட்களை திருடிய குற்றத்திற்காக சட்டத்திற்கு மாறாக எவரையும் தாக்க முடியாது எனவும், அவ்வாறு ஏதேனும் நடைபெறும் பட்சத்தில், அந்த நிறுவனங்களில் பணிப்புரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஆகவே பல்பொருள் அங்காடிகளில் ஏதேனும் குற்றச்செயல்கள் நடத்தால் உரிய அதிகாரிகள் மூலம் காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version