விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன ஆய்வு கப்பல் ஷி யான் 06 தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் அமெரிக்க உதவிச்செயலாளர் விக்டோரியா நூலண்ட் கேள்வியெழுப்பியதாக தகவல் வெளிவந்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார். அவ்வாறான சந்திப்பிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை ஒரு பொதுநிலை நாடு. வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் வந்து செல்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு செயற்பாடாகவே இது அமைவதாக வெளிவிவகார அமைச்சர் விக்டோரியா நூலண்ட்டுக்கு பதிலளித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனைத்து நாடுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சீனாவுக்கு மட்டும் அனுமதி வழங்காமல் விட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவின் ஆய்வு கப்பலான ஷி யான் 06 ஒக்டோபர் மாதப் பகுதியில் தேசிய நீரியில் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடவுள்ளது.