19 வயது மகனை விமானி உதவிக்கு கொண்டு சென்றால் என்னவாகும் – மேர்வின் சில்வா

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது மகனை ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருக்கு அழைத்து சென்றது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு தனது மகன் அமெரிக்காவில் கல்வி கற்பதாகவும், அவரை எந்தவித அரச செலவினங்களுமின்றி தனக்கு உதவிக்காக அழைத்து சென்றதாக விளக்கமளித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் “அமைச்சர் அலி சப்ரி கடும் வேலைப்பளு என கூறுகிறார். அதனால் மகனை உதவிக்கு அழைத்துச் சென்றதாக கூறுகிறார். விமானி ஒருவர் தனது 19 வயது மகனை தனக்கு உதவியாளராக அழைத்துச் சென்றால் என்ன நடக்கும்” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். விளக்கமளிப்பதை நிறுத்திவிட்டு மக்களிடம் மன்னிப்பு கோருங்கள் என அலி சப்ரிக்கு, மேர்வின் சில்வா அறிவுரை கூறியுள்ளார்,

“நீங்கள் ஒரு முன்னணி வழக்கறிஞர். இந்த செயல் உங்களது தொழிற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு அமெரிக்காவில் உதவி செய்ய வேறு திறமையானவர்கள் இல்லையா? உங்கள் மகனை அழைத்துச் செல்லவேண்டும் என்றால் அவரை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மாற்றி அழைத்து செல்லுங்கள். நீங்கள் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்காக வழக்குகளுக்கு சென்றீர்கள். அதனால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. உங்களுக்கு உதவி செய்ய தகுதியானவரை அழைத்து செல்ல வேண்டும். நீங்கள் தற்போது வெளிவிவகார அமைச்சருக்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். நாட்டுக்கு வந்ததும் பதவியை இராஜினாமா செய்யுங்கள்” என மேர்வின் சில்வா மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version