எந்த தேர்தல் வந்தாலும் நாம் தயார்- நாமல் ராஜபக்ஷ!
எந்த தேர்தலுக்கும் தாம் தயார் எனவும், அதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடித்தளம் இன்னும் பலமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் துறையில் பல்வேறு பின்னடைவுகளில் இருந்து மீண்டு எழுவதற்குத் தேவையான மனோபலம் பொதுஜன பெரமுனவுக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று (24.09) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்புத் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கருது தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார், மேலும் இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் டி. வீரசிங்க, திஸ்ஸகுட்டி ஆராச்சி மற்றும் ஜெயந்த கடகொட ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.