கென்ய பிரஜை ஒருவர் கைது!

கொக்கைன் (Cocaine) போதைப்பொருளுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட கென்ய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர், 04 கிலோ கிராம் Cocaine போதைப்பொருளை கொண்டுவந்திருந்தாக கூறப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 300 மில்லியன் ரூபாய் என சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version